இந்த குச்சிகளில் முதிர்ந்தவற்றை தேர்ந்தெடுத்தேன்.

(படம்எடுத்த நாள் 18/11/2009)
தேர்ந்தெடுத்த குச்சிகளை சுமார் 3 அல்லது 4 செ.மீ ஆழத்தில் நட்டேன்.

பிற செடிகள் போலவே இவற்றையும் பராமரித்தேன்.
சுமார் 3 வாரங்கள் கழித்து நன்கு வளர்ந்த பின் எடுத்த படம்

சுமார் 25வது நாளில் முதல் முறையாக கீரை கிள்ளினேன். ஆனால் படம் எடுக்க மறந்தேன்.
சுமார் 45வது நாளில் எடுத்த படம் இதோ

பிறகு கிள்ளிய கீரை இதோ

ஆக என் அனுபவத்தில் புதினா வளர்ப்பதின் நன்மைகள்
மிக எளியது
பூச்சி தொல்லைகள் இல்லாதது
கடையில் வாங்குவதைக்காட்டிலும் சுவையானது
கடையில் வாங்குவதைக்காட்டிலும் நறுமணம் அதிகமானது